கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு 7,346 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - 1,772 வீடுகள், 1,330 குடிநீர் திட்டம், 1,772 சுகாதார திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு 7,346 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - 1,772 வீடுகள், 1,330 குடிநீர் திட்டம், 1,772 சுகாதார திட்டம்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தி அதன் பயன்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் 2019ஆம் ஆண்டினுள் 7,346 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 14,225 திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். 

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றிலும் இத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அதன் பிரகாரம் இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக 1,772 வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதோடு, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,772 மில்லியன் ரூபாவும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல வீடுகள் தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வீடுகள் இவ்வருட இறுதிக்கு முன்னர் வழங்கப்படும். 

சுகாதாரத் திட்டங்கள் 1,772 அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காக 82 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள் வீதி மற்றும் நுழைவு வீதி அபிவிருத்திக்காக 107 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1,330 குடிநீர் திட்டங்களுக்காக 36 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அபிவிருத்தியின் கீழ் கட்டடங்கள் நிர்மாணித்தல், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 137 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 

சிறு வியாபார அபிவிருத்திகளுக்காக 40 மில்லியன் ரூபாவும் கிழக்குப் பிரதேசத்தின் விவசாய கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக 56 மில்லியன் ரூபாவும் மீன்பிடி கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக 25 மில்லியன் ரூபாவும் ஏனைய விசேட திட்டங்களுக்காக 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கம்பெரலிய விசேட திட்டத்தின் கீழ் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் கிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 4,141 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்து 9,649 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment