பலாங்கொடை, பின்னவல பிரதேசத்திலுள்ள சணச கிராமிய வங்கியின் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த வருடம் (2018) நவம்பர் 25 ஆம் திகதி, குறித்த வங்கியின் வாடிக்கையாளர்களால் வைப்பிலிடப்பட்ட பணத்துடன் தப்பிச் சென்ற நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர் தொடர்பான சரியான தகவல் கிடைக்காத நிலையில், இன்றையதினம் (06) பலாங்கொடை பிரதேசத்தில் குறித்த பெண் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை, ரத்னலவின்ன, ஜினரதனகம பிரதேசத்தைச் சேர்ந்த, அதுக்கோரலாகே மங்கலிகா சித்ராங்கனி கருணாரத்ன எனும் 48 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ரூபா 12 கோடி (ரூ. 120 மில்லியன்) பணத்துடன் தலைமறைவாகியமை தெரியவந்துள்ளதோடு, இதுவரை குறித்த நபர் தொடர்பில் பின்னவல பொலிஸ் நிலையத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment