மட்டு மாவட்டத்திலுள்ள ஈரன்குளம் பிரதேசத்துக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும், தற்போதைய நைற்றா நிறுவனத் தலைவருமான நஸிர் அஹமட் கடந்த ஞாயிறன்று விஜயம் செய்தார்.
கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து மேற்படி பிரதேசத்தில் 300 மில்லியன் ரூபா பாரிய நிதிச் செலவில் நிர்மாணம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மைலவட்டுவான் பாலத்தை அமைப்பதற்கான கள நிலைமைகளை ஆராய்ந்து அறியும் பொருட்டு இப்பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தின்போது ஏறூவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் உட்பட மேற்படி பிரதேசத்தின் பிரதேசசபை உறுப்பினர்களான துரைரட்ணம், எம்.எம்.சஜித், எம்.எஸ்.எம்.ஜவ்பர், ஏ.எம்.கமால் மற்றும் ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.நசார், உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ரியால், எஸ்.எம்.ஜமால், எஸ்.எம்.சறூஜ், மற்றும் பாடசாலை அதிபர் ஜலால்டீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment