ஏப்ரல் முதலாம் திகதியை பொதுவாக மக்கள் முட்டாள்கள் தினமாக குறிப்பிட்டு வருகின்றனர். முட்டாள்கள் தினத்தை முன்னிட்டுப் பல்வேறு செயற்பாடுகள் நடைபெறும் வேளையில், ´இன்னும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்´ எனும் தொணிப் பொருளையேற்று இன்று நாடளாவிய ரீதியில் சிகரட் புகைப்பவர்களுக்குப் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் இலங்கையில் சிகரட் பாவனை துரித கதியில் குறைந்து வரும் இச்சந்தர்ப்பத்தில், இன்னும் ஏமார்ந்து சிகரட் புகைக்கும் சிலரை அதிலிருந்து விடுபட வைக்கும் முகமாகவே இச்செயற்றிட்டம் இடம்பெற்றுவருகின்றன.
சிகரட் புகைப்பவர்கள் ஏன் அவ்வாறு முட்டாள்களாக குறிப்பிடப்படுகின்றார்கள் எனின் தற்போது சிகரட் ஒன்றின் விலை 65 ரூபாவாக காணப்படுகின்றது. நாள் ஒன்றிற்காக 3 சிகரட்களை புகைப்பவராக இருப்பின் அவர் நாள் ஒன்றிற்கு 200 ரூபா வீண்விரயாமாக புகைத்து செலவு செய்கின்றார்.
எமது நாட்டில் நாள் ஒன்றிற்கு 40 கோடி ரூபாவிற்கு அதிகமான சிகரட் புகைக்கப்படுவதாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலமையில் தொடர்ந்தும் புகைபிடிக்கும் ஒருவராக இருந்தால் அவர் நிச்சயதாக ஏப்ரல் 1 ஆம் திகதியை கொண்டாட வேண்டும்.
அவ்வாறு கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment