இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி வெற்றிக் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஏறாவூர் இளந்தாரகை அணி வீரர்களை பிரதானமாக கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அணியினர் - அம்பாறை மாவட்ட அணியினரை 06 இற்கு 00 என்ற கணக்கில் தோற்கடித்து - சயம்பியன் பட்டத்தை சுவீகரித்து கொண்டனர்.
இதில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற அணியினருக்கு நேரடியாக வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, இராணவ தளபதி டயஸ் சேனாநாயக்க, மாவட்ட அரச அதிபர், இராணுவ கட்டளை தளபதிகள் சர்வ மதப்பெரியார்கள் , விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment