பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் சாரதிக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

பொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற டிபென்டர் சாரதிக்கு பிணை

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த சாகர சரத்சந்திரவை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த டிபென்டர் வாகன சாரதி சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 298ஆம் சரத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாக மன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், 5 இலட்சம் ரூபா சரீரப்பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

அத்துடன் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment