தொடரும் கடும் வரட்சியால் நாடெங்கும் 56,000 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

தொடரும் கடும் வரட்சியால் நாடெங்கும் 56,000 பேர் பாதிப்பு

தொடரும் வரட்சியுடனான காலநிலையால் 56,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைங்களை வழங்குவதற்காக, பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பவுசர் ஊடாக நீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வரட்சி நிலவும் பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது. 

இது தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு வரட்சியை சாதகமாக்கி கொண்டு வனப்பகுதிளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அத்தகையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment