தொழில் வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புக்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் இலங்கை தெற்காசியாவிலே முதன்மை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

தொழில் வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புக்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் இலங்கை தெற்காசியாவிலே முதன்மை

தொழில் வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புக்களைக் கொண்ட நாடுகள் தரவரிசையில் இலங்கை, தெற்காசியாவிலே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. 

உலக வங்கியின் இலங்கைக் கிளையின் தூதுக் குழுவினர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தெரியவந்தது. 

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் உயர் கல்வித் துறை மேம்பாட்டுக்கான உதவிகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்ஷ அதுறுபான, பல்கலைக்கழகங்களின் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, சிலியேட் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கே.டீ.எம்.உதங்க ஹேமதிலக மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பட்டப்படிப்புக்களை வடிவமைத்தல், தொழிற்சந்தைக்கு முகங்கொடுக்கும் வகையில் பட்டதாரிகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுடன் இணைந்த வகையில் பட்டப்படிப்புகளை வடிவமைத்தல் முதலான முக்கிய விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை அரச பல்கலைக்கழக மட்டத்துக்கு உயர்த்துவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் தனியார் நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்களை முன்வைத்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன.

No comments:

Post a Comment