எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் - அமைச்சர் ரவி கருணாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் - அமைச்சர் ரவி கருணாநாயக்க

நிறைவேற்றக்கூடிய விடயங்களையே வாக்குறுதிகளாக வழங்குவதாகத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, எந்தச் சவால்கள் வந்தாலும் மின் பாவனையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய இரட்டை சுழற்சி அனல் மின் நிலைய சுற்றாடலில் நடைபெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போது ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நேற்று அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் எண்ணம் எமக்கில்லை. குறைகள் இருந்தால் அதுபற்றி கட்சிக்குள்ளேயே பேசித் தீர்வு காண்போம். 

இது தேர்தல் வரவு செலவுத் திட்டமென எதிர்க் கட்சியினர் கூறினாலும் இது எதிர்க் கட்சியை இல்லாமலாக்கும் வரவு செலவுத் திட்டமாகும். மின்சாரத்தை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கவே நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். 

குறைந்த வளத்தை அதிகளவு தேவைக்கு பயன்படுத்தி இம்முறை வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கமாக மக்களுக்கு முடிந்தளவு சலுகைகளை வழங்கவே எதிர்பார்க்கின்றோம். இதைவிட வழங்க முடிந்தால் நல்லது. குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் நாம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டுமென்றால் புரிந்துணர்வுக்கு வர வேண்டும். 

ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது இணைந்து வேலை செய்கின்றனர். எங்கோ சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை நிவ்ரத்தி செய்து ஒன்றாக பயணிக்க நாம் முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment