புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக ஜயசிறி விஜயநாத் தென்னகோன் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக ஜயசிறி விஜயநாத் தென்னகோன் நியமனம்

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக, T.M. ஜயசிறி விஜயநாத் தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரான இவரின் நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 நவம்பர் முதல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆக செயற்பட்டு வந்த நிஷான் தனசிங்கவின் இடத்திற்கே அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

T.M. ஜயசிறி விஜயநாத் தென்னகோன், தனது கடமைகளை எதிர்வரும் வாரம் பொறுப்பேற்கவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment