முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்ய இடைக்கால தடை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொ மனுத் தாக்கல் செய்திருந்தார். 

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல் செய்திருந்தார். 

எவ்வாறாயினும் எதிர்வரும் 11ம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment