பாகிஸ்தான் தூதுவர் இந்தியா திரும்புகிறார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

பாகிஸ்தான் தூதுவர் இந்தியா திரும்புகிறார்

பாகிஸ்தான் தூதுவர் சோகைல் மஹ்மூத் இந்தியா திரும்பி தனது பணிகளை கவனிப்பார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. 

காஷ்மீர் புலவாமாவில் தாக்குதல் நடைபெற்ற பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் பெப்ரவரி மாதம் 18ம் திகதி இந்தியாவைவிட்டு வெளியேறினார். 

அவரை பாகிஸ்தான் அரசு ஆலோசனைக்கு அழைத்ததாக கூறப்பட்டது. மறுநாள் பாகிஸ்தானுக்கான இந்திய தூதுவர் அஜய் பைசாரியாவையும் இந்திய அரசு ஆலோசனைக்காக அழைத்தது.

இந்நிலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தவாறு வருகிற 14ம் திகதி இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கும் கர்தார்பூர் சாலை பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை என்பதை இந்தியா உறுதி செய்தது. 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து கீழே இறங்கி, ஆலோசனை முடிந்துவிட்டதால் பாகிஸ்தான் தூதுவர் சோகைல் மஹ்மூத் டெல்லி திரும்பி தனது பணிகளை கவனிப்பார் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment