ஜனாதிபதியின் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வடக்கிற்கான ஒருங்கிணைப்பாளராக அங்கஜன் இராமநாதன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

ஜனாதிபதியின் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வடக்கிற்கான ஒருங்கிணைப்பாளராக அங்கஜன் இராமநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய ரீதியிலான செயற்திட்டங்களை வடக்கில் செயற்படுத்துவதற்கான பிரதான ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரதான செயற்திட்டங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அங்கஜன் இராமநாதனினால் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிராம சக்தி, போதைப் பொருள் தடுப்பு, சிறுவர் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா மற்றும் நிலைபேறான நோக்கு உள்ளிட்ட தேசிய ரீதியான செயற்திட்டங்களை செயற்படுத்தும் பொறுப்பு அங்கஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment