நாட்டில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும் - கூடுதல் கவனம் தேவை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

நாட்டில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும் - கூடுதல் கவனம் தேவை

நாட்டின் வெப்பநிலை வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் இன்று (07) அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு மற்றும் தசை நார் பிடிப்பு, அதிக வெப்பத்தினால் பக்கவாதம் (Sun Strock) என்பன இடம்பெற வாய்ப்பு இருப்பதனால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி நீராகாரங்களை பருகுவதுடன் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வயோதிபர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்களின் உடல்நிலை குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பிள்ளைகளை கவனிப்பாரற்று விட வேண்டாமென்றும் பிள்ளைகளை தனியே வாகனங்களுக்குள் வைத்து விட்டுச் செல்ல வேண்டாமென்றும், அதிக வெயில் சுட்டெரிக்கும் வெளியிடங்களில் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment