நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுவதானது எந்தவொரு தனிநபரும் அந்த அதிகாரத்தை உபயோகிக்க வாய்ப்பளிக்காது. இம்முறை வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமாகவும் அரசியல், பொருளாதார ரீதியில் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டு வரும் திட்டமாகவும் அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது.
சாதாரண மக்களை பலப்படுத்துவதுடன் வறுமை நிலையிலுள்ளோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வரவு செலவுத் திட்டம் வழிவகுத்துள்ளது. அதேவேளை மக்கள் மீது சுமையை திணிக்காமல் அரசாங்கத்துக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவரும் குறிப்பிடுவதைப் போன்று இது ஐ.தே.கவின் இறுதி வரவு செலவுத் திட்டமல்ல. மேலும் பல வரவு செலவுத் திட்டங்களை நாம் சமர்ப்பிப்போம். விவசாயிகள், மீனவர்கள், கைத்தொழிலில் ஈடுபடுவோர் உட்பட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சுற்றுச் சூழல் மாசு தொடர்பிலும் கசினோ, மதுபானம், புகையிலை போன்றவற்றுக்கு அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதானது வரவேற்றக்கத்தக்கது என்றார்.
No comments:
Post a Comment