அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம். ஹனீபா தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம். ஹனீபா தெரிவு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம். ஹனீபா இன்று தெரிவு செய்யப்பட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின்  பிரதித் தவிசாளராக  இருந்த தேசிய காங்கிரஸை சேர்ந்த ஐ.எம். ஜவ்ஃபர் கடந்த வாரம் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய  பிரதித் தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

பிரதித் தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் எஸ்.எம்.எம். ஹனீபா மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த ஏ.எல். அஜ்மல் ஆகியோர் போட்டியிட்டனர்.

பொது வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 11 வாக்குகளைப் பெற்று எஸ்.எம்.எம். ஹனீபா புதிய  பிரதித் தவிசாளராக  தெரிவு செய்யப்பட்டார்.

ஏ.எல். அஜ்மலுக்கு தேசிய காங்கிரஸ் மாத்திரமே 6 வாக்குகளை வழங்கியதுடன், பொதுஜன பெரமுன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment