ஆவா குழுவுடன் தொடர்புடையவர் யாழ்ப்பாணத்தில் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் யாழ்ப்பாணத்தில் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி -தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது இன்று அதிகாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 2 வாள்கள், 2 முகமூடிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச் செயல்கள் தொடர்பான வழங்குகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ். குடாநாட்டின் சில வீதிகளில் ‘ஆவாவின் இராச்சியம்’ என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment