இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் விதவை பெண்கள் நுண்கடன் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக இரத்தினபுரி பிரதேச சபையின் உறுப்பினர் கோபால் தம்பிராஜா கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தொவிக்கையில், இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான தோட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண் தோட்டத் தொழிலாளிகள் இந்த கடன் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இதனால் பல பெண்கள் குடும்பப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் கடன் செலுத்த முடியாமல் மேலும் கடன்களை பெற்று அதனிலிருந்து மீள முடியாதுள்ளனர். இன்னும் சிலர் தமது நகைகளையும் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர்.
எனவே இக்கடன் திட்டத்தில் யாரும் இணைவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் சிலர் தமது ஊழியர் சேமலாப நிதியை பிணையாக கொண்டு கடன்கனை பெற்றுக்கொள்கின்றனர். இக் கடனை எந்த வங்கி அல்லது எந்த நிறுவனம் வழங்குகின்றது என்பது யாருக்கும் தெரியாது.
எனினும் இக்கடனை வழங்குபவர்கள் பிரபல தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தயே கடன் திட்டத்தை நடை முறைப்படுத்துகின்றனர்.
இம்மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதாக கூறப்படுகின்றது. எனவே இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் காவத்தை பகுதி தோட்டமொன்றில் கடமைபுரியும் 59 வயது பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்... இந்த நுண்கடன் திட்டம் கிராமிய பகுதிகளுக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் வாழும் பகுதிகளில் பிரபல்யம் பெற்று வருவதால் பொது மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment