தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக தயார் செய்யப்பட்ட ஒரு தொகை உணவுப் பொருட்கள் முற்றுகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக தயார் செய்யப்பட்ட ஒரு தொகை உணவுப் பொருட்கள் முற்றுகை

தரமற்ற உணவுப் பொருட்களை பொதி செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படும் களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்து அங்கு பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட ஒரு தொகை உணவுப் பொருட்கள் சுகாதார உத்தியோகத்தரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் கூலி அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடு களஞ்சியசாலையாக இதற்கென பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த களஞ்சியசாலையையே நேற்று அதிகாரிகள் முற்றுகை இட்டனர். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களை பொதி செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு தவணை அடிப்படையில் உணவுப் பொருட்கள் இந்த களஞ்சியசாலையிலிருந்து விநியோகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. தலா 10500 ரூபா மற்றும் 6500 ரூபா பெறுமதி கொண்ட உணவு பொருட்கள் இங்கு பொதி செய்யப்பட்டுள்ளன. 

இவற்றுக்கு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அவர்களது வீடுகளுக்கே சென்று உணவு பொருட்கள் முச்சக்கர வண்டி மூலம் விநியோகிக்கப்படுகின்றது. 

இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தவணை அடிப்படையில் பணம் அறவிடப்படுவதினால் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு தேவையான உணவுப் பொருட்களை இந்த களஞ்சியசாலையிலிருந்தே பெற்று கொள்வதாக பொதுமக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகையின் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் பாவனைக்கு உதவாத பருப்பு கௌபி முதலானவற்றையும் அதிகாரிகள் பொறுப்பேற்றனர். இந்த களஞ்சியசாலை நுகர்வோர் கட்டளை சட்டத்துக்கு அமைந்ததாக காணப்படவில்லை. 

இந்த களஞ்சியசாலையை நடத்தி வந்த உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment