படுகொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

படுகொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

கொலை செய்யப்பட்ட ரத்கம வியாபாரிகள் இருவரினதும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நிதி அன்பளிப்பை வழங்கினார்.

தமது பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த அவ்வியாபாரிகளின் மனைவிமார் ஜனாதிபதியைசந்தித்தனர். 

அவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, அக்குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி அன்பளிப்பை வழங்கினார்.

No comments:

Post a Comment