மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.யூ.எம். இஸ்மாயில் நேற்று கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டாரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியை வகித்து வந்த காத்தான்குடியைச் சேர்ந்த திரு. ஐ.எம். செரிப்தீன் கடந்த 02.02.2019ல் ஓய்வு பெற்றுச் சென்றதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்மாயில் 06.10.1984 இல் கல்வியமைச்சினால் முதன்முதல் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 27.12.1984 முதல் தராதரப்பத்திரமுள்ள ஆசிரியராக குருநாகல் மாவட்டப் பாடசாலை ஒன்றில் நியமனம் பெற்று அதன்பின் பயிற்றப்பட்ட ஆசியராக, பட்டதாரியாக, பட்டப்பின் கல்வி டிப்ளோமாதாரியாக முன்னேறி பயிற்றப்பட்ட பட்டதாரி என்ற வகையில் கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திலுள்ள கஷ்டப்பிரதேச பாடசாலையான மட்/றிதிதென்ன இக்ரா வித்தியாலயத்திலும், மட்/ பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலும் சுமார் பத்து வருடங்கள் கடமை நிறைவேற்றதிபராக கடமையாற்றியுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உருவாக்கத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியுடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நியமனத்தை பொறுத்தவரை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் இந்நியமனத்தில் எடுத்த அக்கறை, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிஸாம், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் அமளலானா ஆகியோரின் சிபாரிசு என்பவை குறுகிய காலத்துக்குள் இவ்வெற்றிடம் நிரப்பப்படுவதற்கு உதவி புரிந்தன என்பதையும் நன்றியுடன் கூறவேண்டியுள்ளது.
படத்தில் கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டாரவிடமிருந்து முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரருக்கான நியமனக் கடிதத்தினை எம்.யூ.எம். இஸ்மாயில் பெற்றுக்கொள்வதையும், அருகில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் முஸ்ஸம்மிலும் காணப்படுகிறார்.
Jawahir Saly
No comments:
Post a Comment