மதுபானங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, 24 மணித்தியாலங்களும் பொலிஸாரைத் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், 011 3024820, 011 3024848, 011 3024850 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக சட்டவிரோத மதுபானங்கள் தொடர்புகளை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை சுற்றிவளைப்பதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, பொலிஸ்மா அதிபரினால் குறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment