சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 30 இலங்கையர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 30 இலங்கையர்கள் கைது

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 30 இலங்கையர்கள் தெற்கு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகொன்றில் பிரயாணம் மேற்கொண்ட இவர்களை தெற்கு கடற்பரப்பின் 80 மைல்ககுக்கப்பால் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு டோரா கப்பல்கள் மூலம் இடைமறித்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் இசுரு சூர்யபண்டார தெரிவித்துள்ளார்.

"சந்தேக நபர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் ரியூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்", என்று கற்படை பேச்சாளர் இசுரு சூர்யபண்டார கூறியுள்ளார்.

No comments:

Post a Comment