2,500 பெண் பொலிஸாரை சேவையில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

2,500 பெண் பொலிஸாரை சேவையில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை

பொலிஸ் சேவையில் 2,500 பெண் பொலிஸ் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகவுள்ளது. 

அதேநேரம், தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய பொலிஸாரின் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை (06) நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

தமிழர்கள் செறிவாகவுள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் கூடுதலாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் கடமையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மக்கள் தாம் விரும்பிய மொழியில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைச் செய்யக் கூடிய வசதி இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

விசு கருணாநிதி

No comments:

Post a Comment