ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்க கூடாது - பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்க கூடாது - பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு புதிய அரசின் கீழ் சுகாதார அமைச்சோ வேறு அமைச்சோ வழங்கப்படுவதற்கு தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

அந்த சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 

இது சம்பந்தமாக தற்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நபர்கள் ஒரு போதும் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கக் கூடாது என்று அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment