இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 ஸ்தானங்களால் முன்னேறி 100வது இடத்தை அடைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 100 புள்ளிகளின் அடிப்படையில் நாடுகள் மதிப்பிடப்பட்டன. இலங்கை 61 இற்கு மேலான புள்ளிகளை பெற்றிருக்கிறது.
கட்டுமான துறைசார்ந்த அனுமதி பத்திரங்களை கையாளும் நடைமுறையை இலங்கை மென்மேலும் சீராக்கி, புதிய வசதிகள் மூலம் அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை பெருமளவில் குறைத்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலகு வர்த்தக சுட்டெண் பட்டியலில் இந்தியா 77 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 136 ஆவது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment