பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் சபாநாயகர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 2, 2018

பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் சபாநாயகர் அறிவிப்பு

எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அரசியற் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அடுத்த வாரமளிவில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்த போதும் தன்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் பின்னர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment