வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் எரிபொருள் நிலையமொன்றின் பணம் வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்தச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக எரிபொருள் நிலையத்தில் சேவை செய்யும் ஊழியர் ஒருவர் எடுத்தச் சென்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா - கண்டி வீதியின் தேக்கவத்த பகுதியில் நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment