ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்தமை தொடர்பான விவகாரத்தில் சந்தேக நபர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவர் கடமையாற்றிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பயன்படுத்திய அலுவலகம் சீல்வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் கையாண்ட ஆவணங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டிருந்த மற்றும் நடந்தேறிய வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாமல் குமார என்ற உளவாளி வெளிப்படுத்திய தொலைபேசி கலந்துரையாடலில் பல விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களுக்னு நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளை கொலை செய்வதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவை ஏற்படுத்துவதும் இனங்களுக்கிடையிலான வன்முறைக்கு தூபமிடுவதும் பெரிய காரியமல்ல.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பாதுகாப்புத் துறையின் முக்கிய பிரமுகர்கள் என்பதால் எமது இனத்தின் மீதான அட்டூழியங்களை அரங்கேற்றுவது என்பது அவர்களுக்கு யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றதே.
இது இவ்வாறிருக்க, இந்த விவகாரம் தொடர்பில் சரியான சந்தர்ப்பத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தி சதிகாரர்களின் கழுத்தில் இன்னொரு சுருக்கை மாட்ட வைத்துள்ளார் பிரதியமைச்சர் ஹாரீஸ். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படுத்துவதற்கும் தனக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் 'தூசன விரோதி பலகாய' ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
குறித்த நபரைக் கைது செய்து விரிவான விசாரணை நடத்தி இனக்கலவரங்களை ஏற்படுத்துவதன் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் ஹரீஸ் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்களின் நலனையும் கருத்தில் கொண்டே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். உண்மையில் அவரது இந்தச் செயற்பாட்டை கட்சி, பேதமின்றி நாம் வரவேற்க வேண்டும். நன்றிகள் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களே!
ஏ.எச்..சித்தீக் காரியப்பர்
இதனுடன் தொடர்புடைய செய்திக்கு
https://www.newsview.lk/2018/10/blog-post_29.html
No comments:
Post a Comment