இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 7, 2018

இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்

ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் பெரும்பாலும் தலைவர் என அழைப்பது வழக்கம். இந்நிலையில், ஒரேஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதனுடன் தொடர்பான செய்தியினை பார்வையிட
http://www.newsview.lk/2018/08/blog-post_448.html

No comments:

Post a Comment