வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இராஜாங்க அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் சிங்கள ராவய முறைப்பாடு செய்துள்ளது.
விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமான வாழ முடிந்ததாகவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுகந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் பலவற்றிலும் இன்றைய பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான முன்னரான செய்திக்கு
http://www.newsview.lk/2018/07/blog-post_35.html
http://www.newsview.lk/2018/07/blog-post_36.html
No comments:
Post a Comment