மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் பாடசாலைக்கு செல்லாத 20 சிறுவர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் பாடசாலைக்கு செல்லாத 20 சிறுவர்கள்

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆரையம்பதி தாழங்குடா பிரதேசத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பாடசாலை செல்லாதிருந்த சிறுவர்கள் சுமார் 20 பேர் கண்டு பிடிக்கப்பட்டனர். இந்த சிறுவர்கள் பாடசாலை செல்லாது வீடுகளில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு செல்லவேண்டிய வயதைக்கொண்டிருக்கும் இவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது அத்தியாவசிய விடயமாகும் என்றும், அதற்குதேவையான நடவடிக்கை மேற்கொள்ளாதவிடத்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment