விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவரின் அருகில் வந்த பெண் ஒருவர், தனது மார்பு கச்சையை கழற்றியுள்ளார். இதனை அவதானித்து பொலிஸார் உடனடியாக குறித்த பெண்ணை பிடித்து பரிசோதித்த போது, மார்பு கச்சையினுள் ஹெரோயின் இருப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு,
மார்புக்கச்சைக்குள் மறைத்து, ஹெரோயின் போதைப்பொருளை நீதிமன்றுக்கு எடுத்து வந்து, வழக்கு விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட விளக்கமறியல் கைதி ஒருவருக்கு அதனை வழங்க முற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்குமிடத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்ததாகவும் அவரிடமிருந்து கைதிக்கு வழங்க முற்பட்ட 5 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் வருவோர் சோதனை செய்யப்பட்ட பின்பே உள் நுழைய அனுமதிக்கப்படும் நிலையில், இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் நேற்றுக்காலை நீதிமன்றுக்கு வந்துள்ளார்.
பெண்ணொருவர் போதைப்பொருள் கொண்டுவருவது தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் அவதானமாக இருந்துள்ளனர்.
குறித்த பெண் தனது மார்புக் கச்சைக் குள் மறைத்து வைத்த போதைப் பொரு ளை கைதிக்கு வழங்க முற்பட்டவேளை யில் பொலிஸ் கான்ஸ்டபிள் அவரைக் கைது செய்துள்ளார். கைதான பெண்ணி டம் வாழைத்தோட்டப் பொலிஸார் விசார ணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment