இத்தாலியில் இன்று தேர்தல் - தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என கணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

இத்தாலியில் இன்று தேர்தல் - தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என கணிப்பு

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவை முழு பெரும்பான்மை பெற முடியாது என்று கூறப்படுகிறது.

950 இருக்கைகளை கொண்ட இத்தாலி பாராளுமன்றத்தில் 5 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாகவும், 630 பேர் துணை உறுப்பினர்களாகவும் உள்ளனர். மீதமுள்ள 315 இடங்களுக்கான தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. பின்னிரவு 11 மணிவரை நடைபெறும் இந்த தேர்தலில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.

தற்போதைய அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி அளவுக்கு அதிகமாக அகதிகளை அனுமதித்ததால் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த தேர்தலில் அவரது தலைமையிலான ’போர்ஸா இட்டாலியா’ கட்சி வெற்றி பெற முடியாது என்பதை தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்புகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன.
அதே வேளையில் பிரதான எதிர்க்கட்சியான பைவ் ஸ்டார் மூவ்மென்ட் மூன்றாவது இடத்துக்கு வரும் அளவுக்கு அதிகமான வாக்குகளை பெறலாம். ஆனாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவது கடினம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், முதல் இடத்தை பிடிக்கும் மத்திய-வலதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 40 சதவீதம் வாக்குகளை நிச்சயமாக பெறாது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க சில்வியோ பெர்லுஸ்கோனி முயற்சி செய்யக்கூடும்.

எனினும், அந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்காமல் தொங்கு பாராளுமன்றம் என்ற நிலைதான் நீடிக்கும் என இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

No comments:

Post a Comment