தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­க­ கல்­வி­சாரா ஊழி­யர்­கள் நாளை மற்றும் நாளை மறு­தினம் ­பணிப் பகிஷ்­க­ரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­க­ கல்­வி­சாரா ஊழி­யர்­கள் நாளை மற்றும் நாளை மறு­தினம் ­பணிப் பகிஷ்­க­ரிப்பு

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­க­ கல்­வி­சாரா ஊழி­யர்கள் நாளை 06 ஆம் திக­தியும், நாளை மறு­தினம் 07ஆம் திக­தியும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தென்­கி­ழக்கு பல்கலைக்கழ­க­ ஊ­ழியர் சங்­கத்­தின்­ செ­ய­லாளர் வை.முபாறக் தெரி­வித்தார்.

மொழித்­தேர்ச்சிக் கொடுப்­ப­னவு, காப்­பு­றுதி சேவைகள், சொத்துக்களுக்­கான கடன் எல்­லையை அகற்­றுதல், உரிய ஓய்வூதிய முறையை உரு­வாக்­குதல், பதவி உயர்­வு­க­ளுக்­கான வரை­ய­றை­களை நீக்­குதல், சம்­பள உயர்­வு­களில் காணப்­படும் வேறு­பா­டு­களை நீக்­குதல், ஆட்­சேர்ப்பு நடை­மு­றைகள் போன்­ற­ கோ­ரிக்­கை­க­ளு க்கு இது வரையில் சரி­யான தீர்வு வழங்கப்படவில்லை. இக்கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு கோரியே இரண்டு நாள் வேலை நிறுத்­தத்தில் ஈடு­ப­ட­வுள்ளோம்.

மேற்­படி எமது கோரிக்­கை­க­ளுக்கு சாத­க­மான தீர்வு வழங்­கா­விடின் அனைத்துப் பல்­க­லைக்­க­ழக ஊழியர் சம்­மே­ளனம் அனைத்துப் பல்க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் தொடர்ச்­சி­யான வேலை நிறுத்தப் போரா ட்­டத்தில் ஈடு­படும்.

அனைத்துப் பல்­க­லைக்­க­ழ­க­ஊ­ழியர் சம்மேளனம் உயர் கல்வி அமைச்சின் செய­லாளர் மற்றும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் ஆகி­யோ­ருடன் கடந்த ஜன­வரி மாதம் 23ஆம் திகதி நடத்­திய பேச்­சு­வார்த்­தையின் போது எட்­டப்­பட்ட தீர்மா­னங்­க­ளுக்கு இது­வரை தீர்வு கிடைக்­க­வில்­லை­யெ­னவும் அவர் கூறினார்.

அனைத்துப் பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்க சம்­மே­ள­னத்தின் கூட்டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய அனைத்துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும்­ க­டந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதியும் மற்றும் ஜனவரி மாதம் 25ஆம் திகதியும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment