நிந்தவூரில் சூடுபிடித்துள்ள அரசியல் களம் (பகுதி 01 நடுநிலை அலசல்) - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

நிந்தவூரில் சூடுபிடித்துள்ள அரசியல் களம் (பகுதி 01 நடுநிலை அலசல்)

நீண்டகாலமாக நிந்தவூர் பிரதேச சபையில் ஆதிக்கம் செலுத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ், இம்முறை இரண்டாக பிளவுபட்டு ஒரு அணியினர் ஐக்கிய தேசியக்கட்சியிலும் இன்னொரு அணியினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருவேறு திசைகளில் தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருப்பது வழமையான நிந்தவூர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் போலல்லாத புதிய தேர்தல் ஒன்றை கட்டியம் கூறி நிற்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாக இரண்டு முறை தவிசாளராக இருந்த திரு. அஷ்ரப் தாகிர் அவர்களின் கட்சியுடனான பிரிவு நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கலாம். அதேவேளை தாகிர் இல்லாமலே எனது செல்வாக்கில் பிரதேச சபையை கைப்பற்ற முடியும் என்ற முனைப்பில் சுகாதார பிரதி அமைச்சர் தனது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது உண்மையில் முன்னாள் தவிசாளருக்கும், சுகாதார பிரதியமைச்சருக்குமிடையில் இடம்பெறும் ஒரு உள்ளூர் போட்டிபோலவே தெரிந்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மீதான நேரடி தாக்குதலாகவே கணிக்க முடிகிறது. காரணம் இவர்களுக்கு அப்பால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் சராமாரியாக கட்சியின் தலைவரை தாக்கி வந்த நிலையில், இந்தக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டமை திடீர் திருப்பமாகும். செயலாளர் நாயகம் தலைமையை மாற்றவேண்டும் அதற்கு இத்தேர்தலில் அவர்கள் தோற்க வேண்டும் என்ற தொனியில் மேடைகளில் முழங்கி வருகிறார். இது காலங்காலமாக நிந்தவூர் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் தான் என்ற பலமான கோட்டையின் மீது விழுந்துள்ள ஓட்டைகளாக உற்றுநோக்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் இற்கும் அதன் தற்போதைய தலைமைக்கும் நிந்தவூர் பிரதேசம் நிறையவே கடன்பட்டுள்ளது. ஆயினும், இத்தனை எதிர்ப்பலைகள் எதனால்? அதிகாரமிக்க, பல காத்திரமான அபிவிருத்திகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் சேவகனான ஒரு பிரதியமைச்சர் இருந்தும், கட்சிக்கு எதிராக இத்தனை எதிர் விமர்சனங்கள் எதனால்?? மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி நிலைக்கு காரணங்கள் என்னென்ன?? பணமும், பொருட்களும் கொடுத்து வாக்காளர்கள் தேடவேண்டிய இக்கட்டில் இந்தக்கட்சியை தள்ளிவிட்டது யார்??

நடுநிலையான அலசல் தொடரும்...

ஷிப்லி அஹமட்
விரிவுரையாளர்
தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
ஒலுவில்

No comments:

Post a Comment