மலையகத்தில் சிறுத்தையின் அட்டகாசம் பிடிக்கும் வரை போகமாட்டோம்-துப்பாக்கிகளூடன் அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2018

மலையகத்தில் சிறுத்தையின் அட்டகாசம் பிடிக்கும் வரை போகமாட்டோம்-துப்பாக்கிகளூடன் அதிகாரிகள்

பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் அட்டகாசம் தொடரும் நிலையில் இதுவரை சிறுத்தையின் தாக்குதலுக்கு 7 பேர் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிப்புக்குள்ளாகிய எழுவருக்கும் சிறுத்தை தாக்குதலின் மூலம் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுத்தையின் அட்டகாசத்தை தடுப்பதற்காக துப்பாக்கிகளுடன் வருகை தந்த வனஜீவராசிகள், அட்டன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுத்தையின் அட்டகாசத்தை தடுக்க முடியாது இருந்த நிலையில், மேலும் சிறுத்தை பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னாலே மீண்டும் ஒருவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் தீ பந்தம் ஒன்றை ஏந்திச் செல்லுகையில் சிறுத்தையால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

மரங்களுக்கிடையில் தாவித்தாவி தாக்குதலை மேற்கொள்ளும் சிறுத்தையை பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாத நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வீடுகளுக்கு சென்றால் சிறுத்தையின் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் சிறுத்தையை பிடித்தே தீருவோம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment