ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் 'கொல்லப்பட்டார். - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் 'கொல்லப்பட்டார்.

ஏமனின் அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்த அலி அப்துல்லா சலே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா கொல்லப்பட்டது குறித்து ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் அவுதி "எங்களுடைய சிறந்த தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைக்கும் இடையே நடந்த மோதலில் 125 பேர் கொல்லப்பட்டனர். 230க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா சமீபத்தில் சவுதி கூட்டுப் படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment