இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களில் மாற்றம்

உள்வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திருத்தியுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்போதுள்ள உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாசா தெரிவித்தார்.

அதன்படி கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள், விமான நிலையத்தை வந்தடைந்ததும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்கள் வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையாக பரிசோதனை செய்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க அவசியம் இல்லை.

புதிய வழிகாட்டுதல்களின்படி, இலங்கைக்கு விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட எதிர்மறையான கொவிட்-19 பி.சி.ஆர் சோதனை அறிக்கை உள்ளவர்கள், விமான நிலையத்தில் மீண்டும் ஒரு முறை கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை சோதித்தால் அவர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.

கொவிட்-19 தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளைப் பெற்ற பயணிகள் அசல் தடுப்பூசி சான்றிதழ் / அட்டை அல்லது தடுப்பூசி சரிபார்க்கக்கூடிய சான்றுகளை எடுத்து வருதல் வேண்டும்.

இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணிநேரத்திற்கு முன்னர் ஆங்கில மொழியில் எதிர்மறையான கொவிட்-19 பி.சி.ஆர். சோதனை அறிக்கையை கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும்.

கொவிட்-19 தடுப்பூசி பெறாத அல்லது பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அளவை பூர்த்தி செய்யாத அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவு தடுப்பூசி முடித்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாட்டிலிருந்து புறப்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்ததும் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

எனினு அதிக ஆபத்து உள்ள பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு புதிய உத்தரவு பொருந்தாது.

இலங்கை குடிமக்கள், இலங்கை கடற்படையினர் அல்லது இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்போர் நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் முன் ஒப்புதல் பெறத்தேவையில்ல.

No comments:

Post a Comment