இந்தியாவின் இரண்டாம் தர அணியுடன் விளையாடுவது இலங்கைக்கு அவமானம் : தற்போதுலுள்ள வீரர்கள் நாட்டுக்காக அன்றி தமக்காகவே விளையாடி வருகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

இந்தியாவின் இரண்டாம் தர அணியுடன் விளையாடுவது இலங்கைக்கு அவமானம் : தற்போதுலுள்ள வீரர்கள் நாட்டுக்காக அன்றி தமக்காகவே விளையாடி வருகின்றனர்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் தர அணி வந்திருப்பது நாட்டுக்கு அவமானமாகும்.

தற்போது எமது அணியிலுள்ள வீரர்கள் நாட்டுக்காக அன்றி தமக்காகவே விளையாடி வருகின்றனர் என 1996 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்று கொடுத்த அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே 3 சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர், 3 சர்வதேச இருபதுக்கு 20 தொடர் ஆகிய இரண்டு தொடர்கள் நடக்கவிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இலங்கை அணிக்கெதிரான இரு வகையான தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாம் தர அணியொன்று விளையாடுவதானது, இலங்கை கிரிக்கெட்டின் தரம் எந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இந்தியாவின் இரண்டாம் தர அணியொன்றுடன் விளையாட முடியாதென ஏன் எமது கிரிக்கெட் நிர்வாகத்தினர் எதிர்ப்பு ‍தெரிவிக்கவில்லை.

இவ்வாறு இரண்டாம் தர அணியொன்றுடன் நாம் விளையாடுவது எமக்கு அவர்கள் செய்யும் அகெளரவமாகும்.

தற்போது இலங்கை வந்திருக்கும் இந்திய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பிரகாசித்தவர்களாவர். அவர்கள் இலங்கை அணிக்கெதிராக சிறப்பாக விளையாடுவார்கள்.

இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் தர அணி வந்திருப்பது நாட்டுக்கு அவமானமாகும்.

தற்போது எமது அணியிலுள்ள வீரர்கள் நாட்டுக்காக அன்றி தமக்காகவே விளையாடி வருகின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment