ஹெய்டியின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 21, 2021

ஹெய்டியின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்

ஹெய்டியின் புதிய பிரதமராக ஏயல் ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸின் படுகொலை ஆழ்ந்த பிளவுபட்ட கரீபியன் தேசத்தை அதிக அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய இரண்டு வாரங்களுக்குள் இந்த நியமனம் வந்துள்ளது.

முன்னாள் பிரதம அமைச்சர் கிளாட் ஜோசப் இந்த வார தொடக்கத்தில் "தேசத்தின் நன்மைக்காக" பதவி விலகுவதாகக் கூறினார்.

சனிக்கிழமையன்று சர்வதேச இராஜதந்திரிகளின் ஒரு முக்கிய குழு ஹென்றிக்கு ஆதரவாக வந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது.

இந்நிலையிலேயே செவ்வாயன்று தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நடைபெற்ற விழாவின்போது ஹென்றி, பிரதமர் பதவியை முறையாக ஏற்றுக் கொண்டார்.

71 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ஹென்றி பதிவியேற்பு விழாவில், சமூகத்தின் பல்வேறு துறைகளை சந்தித்து ஹெய்டி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 7 அதிகாலை ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அவரது இல்லத்தில் படுகொலை செய்ப்பட்டதிலிருந்து குழப்பத்தின் விளிம்பில் உள்ள ஹெய்டியை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஹென்றி ஒரு புதிய அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad