பல்வேறு அமைச்சுகளின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றம் - புதிய இராஜாங்க அமைச்சு உருவாக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

பல்வேறு அமைச்சுகளின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றம் - புதிய இராஜாங்க அமைச்சு உருவாக்கம்

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நிதியமைச்சு மற்றும் புதிதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட சேர்க்கப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் விடய தானங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அதி விசேட வர்த்தமானியின் அடிப்படையில், நீதி அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாடு அலுல்கள் இராஜாங்க அமைச்சு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நிலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, நெல், மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாஙக அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை நிதி அமைச்சின் கீழிருந்த,
தேசிய திட்டமிடல் திணைக்களம்
தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்
கொள்கை கற்கைகள் நிறுவனம்
கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
நலன்புரி பயனுறுதிச் சபை
அரசாங்க சேவை பரஸ்பர சகாய நிதியச் சங்கம்

ஆகியன பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது தவிர, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்து நிதி அமைச்சு நீக்கப்பட்ட போதிலும், ஏற்கனவே வழங்கப்பட்ட புத்தசாசன, மதம் மற்றும் கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியன தொடர்ந்தும் அவரின் கீழேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கலாநிதி நாலக கொடஹேவா வகித்த நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிலிருந்து கரையோரப் பாதுகாப்பு என்ற விடயம் அகற்றப்பட்டு, புதிய இராஜாங்க அமைச்சாக கரையோர பாதுகாப்பு, மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எனும் புதிய இராஜாங்க அமைச்சு நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன் சேதன மறறும் இயற்கை பசளை உற்பத்தி, விநியோகங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு எனும் அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment