பிரேமலால் எம்.பி யின் விடுதலை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

பிரேமலால் எம்.பி யின் விடுதலை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவினால் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது பிரச்சார மேடையை தயார் செய்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 

இச்சம்பவத்துடன் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பினை ஆட்சேபித்தும் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி மேற்கொண்டுள்ள மனு மீதான மேன் முறையீட்டு விசாரணைக்கே இவ்வாறு திகதியிடப்பட்டுள்ளது. 

இவர் தனக்கு பாராளுமன்ற கூட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைகளின் போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய இவர் பாராளுமன்ற கூட்டங்களுக்கு சமூகமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad