ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை திறக்க தீர்மானம் என்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை திறக்க தீர்மானம் என்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முதற்கட்டமாக செலுத்தும் நடவடிக்கையினை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி போடப்படும், மேலும் இந்த திட்டம் நாளை (13) நிறைவடையும்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

பல்வேறு காரணிகளை முன்வைத்து ஒரு சில ஆசிரிய சங்கத்தில் உள்ள ஆசிரியர்கள் நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தல் நடடிக்கையில் இருந்து விலகியுள்ளார்கள்.

வகுப்பறை கற்பித்தலுக்கும், தொலைநோக்கு முறைமையிலான கற்பித்தலுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. தொலைநோக்கு கல்வி முறைமை மாணவர்களுக்கு முழுமையான கற்றலை வழங்காது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க தீர்மானித்துள்ளோம். மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment