ஹெய்ட்டி ஜனாதிபதி வீட்டில் வைத்து சுட்டுக் கொலை : மனைவி வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

ஹெய்ட்டி ஜனாதிபதி வீட்டில் வைத்து சுட்டுக் கொலை : மனைவி வைத்தியசாலையில் அனுமதி

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்தியை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த மொய்ஸின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது தனது சொந்த வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

வறிய கரீபியன் தேசத்தில் அரசியல் ரீதியாக வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஹெய்ட்டி அரசியல் ரீதியாக பிளவுபட்டு, வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், பரவலான வன்முறைகள் ஏற்படும் என்ற அச்சங்கள் அங்கு தோற்றம் பெற்றுள்ளன.

மொய்ஸ் 2017 இல் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டார், எதிர்க்கட்சிகள் இந்த ஆண்டு தனது ஆணையை மீறி ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ முற்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment