வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதிய மற்றுமொறு பஸ் : 7 பேர் பலி, 8 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதிய மற்றுமொறு பஸ் : 7 பேர் பலி, 8 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆக்ரா-சண்டவுசி நெடுஞ்சாலையில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லஹரவன் கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  

திருமண நிகழ்வொன்றுக்காக சந்தவுனியில் இருந்து சாப்ரா செல்லும் பஸ்ஸின் டயர் லஹரவன் கிராமத்திற்கு அருகே பஞ்சர் ஆனாது. பின்னர் டயரை பஞ்சர் செய்து பழுது பார்க்க பஸ் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, வேகமாக வந்த பிறிதொரு பஸ் பஞ்சரான பஸ்ஸுடன் மோதுண்டே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் பஹோஜியில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதியும், இணை சாரதியும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad