இலங்கையின் மொத்தக் கடனும் வட்டியுமாக 6,188 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது - அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

இலங்கையின் மொத்தக் கடனும் வட்டியுமாக 6,188 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது - அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான மொத்தக் கடனும் வட்டியுமாக 6,188 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, இலங்கையின் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் கடன் தீர்ப்பு கொடுப்பனவுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கையின் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான கடன் தீர்ப்பானது முறையே 986 பில்லியன், 860 பில்லியன், 960 பில்லியனாகவும், அதற்கான வட்டியானது 2020 ஆம் ஆண்டில் 866 பில்லியன், 2021 ஆம் ஆண்டில் 860 பில்லியன், 2022 ஆம் ஆண்டில் 960 பில்லியனாக உள்ளது. 

மொத்தமாக 2020 ஆம் ஆண்டில் 1,854 பில்லியன் கடனும் வட்டியாகவும் செலுத்தியுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டில் 2,117 பில்லியன் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 2,217 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளது.

அதேபோல் 2020 ஆம் ஆண்டு மொத்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையானது 1,266 பில்லியன் ரூபாவாகும், 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையானது 1,568 பில்லியன், 2022 ஆண்டு மொத்த வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையானது 1,242 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான அரசாங்கத்தின் வருமானமானது 407 பில்லியனும், இரண்டாம் காலாண்டுக்கான வருமானமானது 285 பில்லியன் மற்றும் மூன்றாம் காலாண்டுக்கான வருமானம் 368 பில்லியனாகும்.

அதேபோல் எதிவு கூறப்பட்ட மொத்த வருமானமானது, 2020 ஆம் ஆண்டில் 1,528 பில்லியனாகும், 2021 ஆம் ஆண்டில் 1,961 பில்லியனும், 2022 ஆம் ஆண்டில் 2,386 பில்லியனாகும். எவ்வாறு இருப்பினும் கடன்களை மீள செலுத்துவதில் தவணைத் தவறுகள் ஏற்படவில்லை. முறையாக நாம் இவற்றை கையாண்டு வருகின்றோம் எனக் கூறினார்.

No comments:

Post a Comment