2021 இன் சிறந்த கொரிய பொப் பாடல்களின் தரவரிசையில் இடம்பிடித்தது பேக்கியூனின் 'பாம்பி' - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

2021 இன் சிறந்த கொரிய பொப் பாடல்களின் தரவரிசையில் இடம்பிடித்தது பேக்கியூனின் 'பாம்பி'

பிரபல டைம் சஞ்சிகை 2021ஆம் ஆண்டில் இதுவரை வெளியான சிறந்த கொரிய பொப் பாடல்களில் எக்ஸோ உறுப்பினரின் பாம்பி பாடல் இடம்பிடித்துள்ளது.

எக்ஸோ உறுப்பினர்கள் என்பது சியோலை தளமாகக் கொண்ட ஒரு தென் கொரிய - சீன சிறுவர் இசைக்குழு ஆகும். அதில் ஒரு உறுப்பினரான பேக்கியுன் தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் சஞ்சிகை ஜூலை முதலாம் திகதி தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தளத்தில் '2021 இல் இதுவரை வெளியான சிறந்த கொரிய பொப் பாடல்கள் பட்டியலை வெளியிட்டது.

அந்த பட்டியலில், உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ள பேக்கியுனின் 'பாம்பி' சேர்க்கப்பட்டுள்ளது.

பேக்கியூனின் மூன்றாவது மினி ஆல்பமான 'பாம்பி' வெளியிடப்பட்டு 20 நாட்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விற்பனையுடன் மில்லியன் விற்பனையாளரராக மாறினார்.

உலகளாவிய ரீதியில் 60 பிராந்தியங்களில் ஐ டியூன்ஸ் சிறந்த ஆல்பம் தரவரிசையில் 'பாம்பி' முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

சீனாவின் க்யூ கியூ இசை டிஜிட்டல் ஆல்பம் விற்பனை தரவரிசை மற்றும் யுனைடெட் வேர்ல்ட் தரவரிசை, அவரது வலுவான உலகளாவிய தாக்கங்களைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment