ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - 20 பேர் மாயம், 387 பேர் வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - 20 பேர் மாயம், 387 பேர் வெளியேற்றம்

மத்திய நகரமான அடாமியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் காணாமல்போன 20 பேரை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் தென்மேற்கே 90 கி.மீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடலோர நகரத்தில் சனிக்கிழமை கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டும், புதையுண்டும் போனது.

இவற்றில் சிக்குண்ட குறைந்தது இருவர் உயிரிழந்தும், 10 பேர் மீட்க்கப்பட்டும், 20 பேர் காணாமல்போயும், சுமார் 80 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கியோடோ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஷிசுவோகா மாகாண பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜப்பானின் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 700 வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்கள் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் இடைவிடாது மழை தொடர்வதனால் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சுமார் 387 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கியோடோ கூறியுள்ளது.

நெருக்கடியைச் சமாளிக்க அவசர பணிக்குழுவைக் கூட்டிய பிரதமர் யோஷிஹைட் சுகா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சனிக்கிழமை கேட்டுக்கொண்டார்.

ஜப்பான் பூகம்பங்கள், எரிமலைகள் மற்றும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளினால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு நாடு ஆகும்.

No comments:

Post a Comment