பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நட்சத்திர விடுதியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுய தனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment